மேலறைப் பேச்சு 23

லெந்து காலத்தின் இருபத்தி மூன்றாம் நாள் தியானம்


திருமறைப் பகுதி: தூய யோவான் 15:22-25

இந்த நற்செய்தி நூலிலேயே மிகவும் சோகமான இயேசுவின் கூற்று இதுதான் போலும். மனு மக்களை இறை மக்களாக உயர்த்துவதற்குதான் இயேசுவை பிதா இவ்வுலகிற்கு அனுப்பினார். ஆனால் மக்கள் தன்னுடைய போதனைகளையும் அற்புதங்களையும் புறக்கணித்து துணிகிறமாகவும் தன்னிச்சையாகவும் தங்கள் மேல் பாவத்தை வருவித்துக்கொண்டார்கள். இதை நினைத்து இயேசு அங்கலாய்க்கிறார். தமது குமாரனுடைய போதனைகளாலும் செயல்களாலும் கடவுள் தம்முடைய அன்பை வெளிப்படுத்தினார். ஆனால் இயேசுவின் போதனைகளையும் திருப்பணியையும் மக்கள் புறக்கணித்ததால் பாவம் வலுவடைந்தது ”நான் பேசாதிருந்திருக்கலாமோ” (வச 22) ”அற்புதங்களை செய்யாதிந்திருகலாமோ” (வச 24) என்று இயேசு கலங்குகிறார்.

அன்பு தங்கை / தம்பி! கடவுளுடைய அன்பு உனக்காக ஊற்றப்படும் பொழுது, நீ நல்ல பங்கை தெரிந்துகொள்ள வேண்டும். நலமானதைத் தெரிந்துகொண்டால் வளமான வாழ்வு பெறுவாய். அல்லவென்றால் உன் பின் நிலைமை கெட்டுவிடும்; (லூக்.11:26) மீளமுடியாதளவுக்கு கேடுகெட்டுவிடும். இதுதான் இயேசுவின் கவலை.

ஜெபம்:
ஆண்டவராகிய இயேசுவே, துயருறும் என் இரட்சகரே, உமது திருவாய் மொழியையும், திருப்பணியையும் புறக்கணித்த மக்களுக்காக நீர் படும் துயரத்தில் நானும் பங்கேற்கிறேன். என்னை நான் முழுமையாக உம்மிடம் அற்பணிக்கவில்லை என்பதை அறிக்கை செய்கிறேன். என் வாழ்வில் என் கட்டுக்கடங்காத பகுதிகள் இன்னமும் உண்டு. இயேசுவே, எனக்கு துணைபுரியும்.

இயேசுவின் பதில்…….
என் குழந்தாய், நான் மக்களுடைய வாழ்வில் ஒளியேற்ற வந்திருந்தபோது இருளுக்குள்ளேயே மறைந்துகொண்ட மக்களுக்காக நான் மனம் வருந்துகிறேன். மனந்திறந்து அவர்களை வரவேற்க காத்திருக்கிறேன். ”இயேசுவே, எனக்கு துணைபுரியும்” என்ற ஜெபம் நான் கேட்டதிலேயே இனிமையானது. நான் உனக்குக் கண்டிப்பாக உதவிசெய்வேன்.

Devotion for the twenty third day of Lent

Read John 15:22-25

These perhaps are the saddest words of Jesus in the entire gospel. The Father sent Jesus into this world to make us better beings – children of God. Jesus laments over the sin people have brought on themselves voluntarily and deliberately by rejecting all his teaching and his works of miracle. The Father expressed His love through the son’s words and actions. But sin became a conspicuous reality because of peoples’ rejection of the message and ministry of Jesus to the point that Jesus says, “I wish I had not spoken; I wish I had not done the works.”

Dear sister / brother! When the Love of God reaches you, you have to choose. Make the right choice and you will end up infinitely better. If you do not, you will end up worse, far worse. That is what Jesus is regretting.

Prayer,
Lord Jesus, my sorrowful savior, I share your pain over those who rejected your teaching and ministry. I confess I have not submitted myself to you entirely. There are areas in my life still out of control. Please help me.

Jesus might say…..


My child, I am sorry for those who remained in darkness when I came to light up their lives. I wait for them with open arms. “Jesus, help me” is the sweetest prayer I hear. I will help.

James Srinivasan & Grace

Painting Credits: Rev. W. Jebasingh Samuvel

பேராயர் ஜேம்ஸ் சீனிவாசன்,
பேராயர் ஜேம்ஸ் சீனிவாசன்,

தென்னிந்தியா.