மேலறைப்பேச்சு 9

லெந்து காலத்தின் ஒன்பதாவது நாள் தியானம் (வெள்ளி )

திருமறைப் பகுதி: தூய யோவான் 14:4-7

தோமாவுக்கு ஒரு சந்தேகம்: “எங்கே போகிறீர்? நாங்க எப்படி வருவது,

வழி தெரியாதே!” என்றான். அவனுக்கு இயேசு தன்னையே பதிலாக சொல்லுகிறார்: “நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்”

இயேசுவே பாதைக் குறிப்பேடு – வழி; அவரே இந்த பயணத்தின் இலக்கு; சத்தியம் மேலும் பயணிப்பவருக்கு ஊக்கம் அளிக்கும் ஆவியும்

அவரே ஜீவன்! மேலும் இயேசு ”நானே சத்தியம்” என்பதற்கு

”இயேசுவை அறிவதே பிதாவை அறிவது” என்று கூடுதல் விளக்கமும் அளிக்கிறார்: புலன்களைக் கடந்த பிதா நமக்கு புலப்படும் அனுபவம் இயேசுவே!

அன்பு தங்கை,, தம்பி, இயேசுவை நீ அறிவாயா? அவரே நல்வழி; உன்னுடைய ”லைஃப் ஸ்டைல்”, அதாவது சத்தியத்தை இயேசுவில் கண்டாயா? உன்னைத் திடப்படுத்தும் இயேசுவின் ஆவியை அனுபவித்தாயா? – அவரை மேலும் தெரிந்துகொள்ள அவருடைய வாழ்க்கை சரிதையை – நற்செய்தி நூல்களைப் படி, அவருடன் பேசு – ஜெபி. அவரை உன் நேசராகக் கண்டுகொள்! ஆலோசனை வேண்டுமானால் உன் ஆயரை அணுகு..

இயேசு இரட்சகரே,, “வழியும் சத்தியமும் ஜீவனும்” நீர் என்று நான் அறிவேன் உம்மை மேலும் அதிகமாக புரிந்துகொள்ள எனக்கு உதவியருளும்; பிதாவினிடத்திற்கு என்னை வழிநடத்தும்.. உம்மை நான் தெளிவாக புரிந்துகொண்டால் உம்மைப்பற்றி மற்றவர்களுக்கும் சொல்லுவேனே..

இயேசுவின் பதில்…….
என் குழந்தாய், என்னோடு நடக்க உனக்கிருக்கும் ஆர்வத்தைக் கேட்டு மகிழ்கிறேன். ஓரடி மட்டும் எடுத்து வை; ஆன்மீகப் புரிதலுக்குள் சத்தியமாகிய நம் பிதாவை நோக்கி உன்னை படிப்படியாக வழி நடத்துவேன். வா, என் கையைப் பிடித்துக்கொள்.

Devotion for the ninth day in Lent (FRIDAY)

Read John 14: 4-7

It is Thomas this time who speaks up asking, “Where are you going? How do we follow you? We do not know the way!” Jesus presents himself as the answer to his questions. “I am the way, and the truth and the life.” Jesus is the route map – the way; the destination of the journey – the truth and he is also the strength and spirit to help the pilgrim – the life. Jesus adds an explanation of himself as the truth: Knowing Jesus is getting to know the Father. Jesus is the tangible experience of the transcendent Father.


Dear sister, brother! How well do you know Jesus? Jesus is the way to go – He is your lifestyle! Did you find the Father – the truth in Jesus? Have you experienced the empowering spiritual strength of his life in you? What can you do to get to know him better? You re-read his “biographies” –the Gospels and spend time talking to him – pray! Just get to know him better! If you need help, meet your pastor.

Prayer:
Jesus, my saviour, I know you as “the way, the truth and the life.” Please help me understand you better and lead me to the Father. I would tell others about you if only I knew you more intimately.

Jesus might say…..
My child, I am delighted to know your interest in walking with me. Take your first step and I will you lead you into greater understanding as we walk together towards the truth, our Father. Come, hold my hand.

James Srinivasan and Grace.

பேராயர் ஜேம்ஸ் சீனிவாசன்
பேராயர் ஜேம்ஸ் சீனிவாசன்

தென்னிந்தியா