ca. 1850 --- An illustration from a mid-19th century copy of Grand Catechisme des Familles (Christian Doctrine for Families). --- Image by © Stefano Bianchetti/Corbis

24 ஜுன் 2022
யோவான் 3:22-36

• ஒவ்வொருவரும் இவ்வுலகில் வாழும்போது ஓர் நோக்குடையவர்களாக வாழுகின்றனர். திருமுழுக்கு யோவான் தன்னுடைய வாழ்வில் இயேசுவுக்காக வழியை ஆயத்தப்படுத்தும் பணியை சரியாக செய்துள்ளார். அவருடைய வாழ்வில் காணப்பட்ட எளிமைத்தன்மை இறைவாக்குரைக்கும் தன்மை சமுதாயக் கட்டுக்களை சவாலிடும் தன்மை வரவேற்கத்தக்கதாகும்.

• மல்கியா இறைவாக்கினரின் காலத்திலிருந்து இயேசுவின் பிறப்பு வரை 400 வருடங்கள் காணப்பட்டன. இக்காலப்பகுதியில் இறைவாக்குக்கு பஞ்சம் ஏற்பட்டது. இக்காலத்திலேயே திருமுழுக்கு யோவானின் வருகையைப் பற்றி மல்கியா இறைவாக்கினர் பேசுகின்றார் (மல்கியா 3:1-5). இக்கருத்துக்களோடு திருப்பாடலும் ஒத்துப்போகின்றது.

• நற்செய்தி வாசகத்தின் யோவான் 3:22-36 பகுதியில் அக்காலத்தில் ஒரு சிலர் யோவான்ஸ்நானகனின் வாழ்வையும் பணியையும் உற்றுப்பார்த்து இவரே மெசியாவாக இருக்கலாம் எனக் கூறுனர். ஆனால், யோவான் நான் மெசியா அல்ல இயேசுவே மெசியா எனவும், இயேசுவே ஒளி எனவும் நான் ஒளிக்கு சான்று பகர வந்தவர் எனவும் கூறுகின்றார். மேலும், நான் மணவாளன் அல்ல. மாறாக, மணவாளனின் தோழன் எனக் கூறுகின்றார். இதன்மூலம் ஆசிரியர் இயேசுவையே மையப்படுத்துவதாகக் காண்பிக்கின்றார்.

• இரண்டாம் உடன்படிக்கை வாசகத்தில் திருவெளிப்பாடு 3:14-22ல் பயனற்ற திருச்சபையைப் பற்றி ஆசிரியர் பேசுகின்றார். அனலுமில்லாத குளிருமில்லாத வாழ்வு அர்த்தமற்றது எனக் காண்பிக்கின்றார். அன்று திருமுழுக்கு யோவான் பயனுள்ள வாழ்வை வாழ்ந்தார். இதனால், ஏரோதியனால் தலை வெட்டிக் கொல்லப்பட்டார். மேலும், ஆண்டவர் இயேசு இவனின் வாழ்வு மூலம் பெருமிதம் அடைந்தார். எனவே, இப்பேர்ப்பட்ட வாழ்வை வாழ இறைவனிடம் மன்றாடுவோமாக.