மேலறைப்பேச்சு3

லெந்து காலத்தின் மூன்றாம் நாள் தியானம்
திருமறைப் பகுதி: தூய யோவான் 13: 12-17

”செயலாற்றும் அன்பு” பற்றிய செயல்முறைப் பாடம் நடத்திய இயேசு சீடருக்குப் போதிக்க அமருகிறார். போதகரும் ஆண்டவருமான அவரே சீடர்களின் கால்களைக் கழுவினாரென்றால் சீடர்கள் ஒருவருக்கொருவர் பணியாற்ற எவ்வளவு கடன் பட்டிருக்கிறார்கள்! பரஸ்பர பணி இறையரசுக்கு உட்பட்ட மக்களின் பண்பு. இப்படி பணி புரிவதும் பணி பெருவதும் இன்னிசை போன்ற ஒர் இனிய அனுபவம்.

அன்பு தங்கை / தம்பி, உன் திருச்சபையின் உறவிலே ஒருவருக்கொருவர் பணிபுரியும் இந்த இனிமையை அனுபவித்திருக்கிறாயா? இந்த பரஸ்பர பணி தடையின்றி பெருக்கெடுக்க இடையூறுகள் எவை என்று யோசி. ஒருவேளை தடைகள் உனக்குள்ளேயே இருக்கிறதா என்று தன்-ஆய்வு செய்து பார். பிறர்க் காற்றும் சேவையில் நீ ஆசியும் ஆனந்தமும் பெற்ற தருணங்கள் நினைவுக்கு வருகிறதா?

மன்றாடுவோம்

ஊழியம் செய்யவே உலகுக்கு வந்த இயேசுவே. . நான் தன்னலமற்ற அன்புடனும் மனத்தாழ்மையுடனும் நீர் கற்றுக்கொடுத்தது போல நேசிக்கவும் சேவிக்கவும் தேவையான ஒரு பணியாளின் இதயத்தை எனக்குத் தாரும்.

இயேசுவின் பதில்…….

குழந்தாய், நான் உன்னில் அன்பு கூர்ந்தது போல நீ பிறரை நேசிப்பது அவ்வளவு எளிதல்ல. தாழ்மையும் பிறர் அறியாதவண்ணம் செயலாற்றுதலும் கிறிஸ்தவ அன்பின் பண்புகள் என்று மறந்துவிடாதே. நீ அன்பினால் பணியாற்ற முற்படும் பொழுதெல்லாம் உனக்கு உதவ .. நான் உன்னோடுதான் இருக்கிறேன்

Devotion for the third day in Lent
Read John 13:12-17

After dramatizing “love in action” Jesus sits down to teach his disciples. As their teacher and Lord if Jesus himself washed their feet, how much more they are bound to serve one another! Mutuality in service is the character of the people of God’s kingdom. It is a beautiful rhythm of giving and receiving in love.

Dear sister/ brother! Have you experienced this rhythm of mutual service in the fellowship of your church? What are some obstacles of free flow of this mutuality? Please look into yourself – introspect to find if the stumbling blocks are within you. Think of a time when you experienced blessing or happiness as a result of serving others.

Prayer
Lord Jesus who came to serve, give me the heart of a servant, so that with humility and selfless love I may learn to love and serve others as you taught.

Jesus might say…..
My Child, I know it is not easy for you to love others as I have loved you. Humility and anonymity are the hall marks of such love. I am with you to help you when you try to serve in love.

பேராயர் ஜேம்ஸ் சீனிவாசன்
பேராயர் ஜேம்ஸ் சீனிவாசன்

தென்னிந்தியா