மலையக இறையியல்

வரலாற்றில் ஜொலிப்பவனுக்கும், ஜெயித்தவனுக்கும் மட்டுமே இடமுண்டு என்கிற கூற்று நம் மத்தியில் பரவலாக உண்டு. ஜெயிப்பவனின் வரலாறு அதிகமாக பேசப்படும், இவ்வாறு ஜெயிப்பவனுக்கு மட்டும் இடம் என்றால் சரித்திரத்தில் மறக்கப்பட்ட, மறைக்கப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களின் நிலை என்ன ?

“Until the Lion tells the story, the hunter will always be the hero.” 'until lions have their own story tellers, hunters will always be the hero in their story'; 'until the lion learns to speak, the tales of hunt will always favor the hunter'

இவை ஆப்பிரிக்க பழமொழிகள், சிங்கம் தனது கதையை சொல்லும் வரை, வேட்டைக்காரனே கதையின் நாயகன். இவ்வுலகம் வெற்றி பெற்றவர்களின் கதைகளையே கேட்கிறது, ஒடுக்கப்பட்ட, மறுக்கப்பட்ட, மறைக்கப்பட்ட, மறக்கப்பட்ட மக்களின் கதைகளையும் , அவர்களின் குரல்களையும், குமுறல்களை நாம் யாரும் கேட்பதில்லை. எமது கதைகளை நாம் சொல்லாவிட்டால் வேறு யார் சொல்வது ?

1800களில் இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட கோப்பி, பின்னர் தேயிலை பயிர்செய்கையில் வேலை செய்ய, பெரும்தொகையான கூலியாட்கள் தேவைப்பட்டனர். உள்நாட்டு மக்கள் கூலிகளாக வேலை செய்ய விரும்பவில்லை, ஆகவே வேறு நாட்டில் இருந்து கூலியாட்களை பெற்றுக்கொள்ள பிரித்தானியர்கள் யோசித்தனர். பல தேடலுக்கு பிறகு, தமிழ்நாட்டில் பஞ்சம் காரணமாக வேலை தேடும் மக்களை இவர்கள் குறிவைத்தனர். இக்காலத்தில் தமிழ்நாட்டில் பல கிராமங்களில் இருந்து பல லட்சக்கணக்கான மக்கள், கூலிகளாக இலங்கைக்கு அழைத்து வரப்பட்டனர்.

‘கண்டிச்சீமையிலே பொன்னும் மணியும் கொட்டிக்கிடக்கின்றன, தேங்காயும், மாசியும் மண்ணில் விளைகின்றது. தேனும், தினை மாவும், பருப்பும் அள்ள அள்ளக் குறையாமல் கிடைக்கிறது. யார் வேண்டுமானாலும் அவற்றை அள்ளிக் கொள்ளலாம்’ என்று பொய் கலந்த பசப்பு வார்த்தைகளினால் ஏமாற்று வாக்குறுதிகளினாலும் மக்களை நம்ப வைத்து ஏமாற்றி இலங்கைக்கு அழைத்து வந்தனர்.

தமிழ்நாட்டில் பஞ்சம் அதிகமாகிக் கொண்டிருந்தது காலத்தை பயன்படுத்திக்கொண்ட கங்காணிமார், இலங்கையில் அதிகமான வேலை வாய்ப்பு உண்டு, அங்கு நீங்கள் சந்தோஷமாகவும்,நிம்மதியாக வாழலாம். சாதி அடிமைத்தனங்கள், ஒடுக்குமுறைகள், பிரிவினைகள் அங்கு இல்லை என்று மக்களை நம்ப வைத்தனர். இவ்வாறு நம்பி புது வாழ்வை தேடி இங்கு வந்தவர்களே 200 ஆண்டுகளாக தேயிலை தோட்டங்களில் பணிபுரியும் எம் மலையக மக்கள். வளமான எதிர்காலத்தை தேடி, இலங்கைக்கு வந்த எம் மூதாதையருக்கு கிடைத்தது ஏமாற்றமே. அரசியல், பொருளாதார, சமூக, சமய, கலாச்சார, ரீதியாக ஒடுக்கப்பட்டு இன்னும் லயன் காம்புராக்களில் வாழும் கொத்தடிமைகளாக இவர்களை நாம் பார்க்கலாம். இன்னும் வெளி உலகமே தெரியாமல் அந்தகாரத்திலும் அடிமைத்தனத்தில் வாழும் ஓர் மக்கள் கூட்டம் இவர்கள்.

இவ்வாறு ஏறத்தாழ 200 ஆண்டுகளுக்கும் மேலாக இலங்கையில் வாழ்ந்துவரும் சொந்த கால்களினால் உழைத்து வாழும் மலையக மக்களின் வரலாற்றையும், அவர்களின் விடுதலை வாழ்விற்கு தேவையான முன்னெடுப்புக்களையும், அனுபவித்து வரும் கொடுமைகளையும் கலைகளின் ஊடாக பதிவுசெய்வதே இந்தப் பக்கத்தின் நோக்கம்.

ஆ இவனா, இவே அவன்ட மகன் தானே!
உடைத்தல் + உருவாக்குதல்  வாலிபனான இயேசு சமூகத்தில் நடக்கும் ஒவ்வொரு காரியங்களையும் கூர்ந்து கவனிக்கும் ஆற்றல் …
இறக்கப்படாத சிலுவைகள்
கிட்டத்தட்ட இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்னதாக இயேசு என்னும் ஒரு தனிமனிதன் முழு உலகின் மீட்பிற்காக கொடிதான …
What makes a good cup of tea?
There is a whole book in this statement. What makes a good …
‘இயேசுவின் மாட்டுத்தொழுவமும், லயின் காம்பிராவும்
மரியாளும் யோசேப்பும் மிகுந்த மனவேதனையோடும் உடல்வலியோடும் தங்குவதற்கு ஓர் இடத்தை தேடிக்கொண்டிருந்தனர். மரியாள் பிரசவ வலியால் …
இலங்கையில் அம்பேத்கர்
"இலங்கை தமிழருக்கு ஓர் அம்பேத்கர் கிடைத்திருந்தால்..?" 1800களில் இலங்கையின் மத்திய மாகாணத்தில் உள்ள கண்டியை சுற்றியுள்ள …
தோட்டக்காட்டு இயேசு
இலங்கை மலையக மக்களில் ஒருவராக இயேசு 19 நூற்றாண்டில் உலகில் பாரிய மாற்றங்கள் ஏற்பட்டன, இக்காலத்திலேயே …
தோட்டக்காட்டு பயலுக்கு எதுக்கு டா படிப்பு ?
தோட்டக்காட்டு பயலுக்கு எதுக்கு டா படிப்பு?, உனக்கு படிப்பு வராட்டி உங்கப்பன் மாதிரி தேயிலை தோட்டத்துல …