31 ஜுலை 2022

Lasting Life of Love

மத்தேயு 19:3-9

• திருமணம் திருவருட்சாதனங்களில் ஒன்றாகும். இது அன்பினை மையமாகக் கொண்ட முடிவில்லா வாழ்வாகும். ஆரம்பத்தில் மனிதன் தனிமையாய் வாழ்வது நல்லதல்ல எனக் கண்ட கடவுள் திருமணத்தை ஏற்படுத்தினார். இதன்மூலம் திருமணம் புனிதப்படுத்தப்பட்டுள்ளது.

• தொடக்கநூல் அல்லது ஆதியாகமம் 29:1-20 வரையான இப்பகுதியில் யாக்கோபு தனக்குரிய துணையை தெரிந்தெடுப்பதை நாங்கள் பார்க்கின்றோம். இது இறைத்திட்டத்தின் மூலம் நிறைவேறுகின்றது.

• திருப்பாடல் அல்லது சங்கீதம் 128ல் திருமணத்தினூடாக வெளிப்படும் ஆசீர்வாதங்களைப் பற்றி ஆசிரியர் குறிப்பிடுகின்றார். குறிப்பாக, திருமணத்தின் மூலம் பிறக்கும் குழந்தைகள் கடவுளின் ஆசீர்வாதங்கள் எனவும், சுதந்திரவாளிகள் எனவும் காட்டுகின்றார். இவர்களையே ஆண்டவர் இயேசு இறையரசின் பிரஜைகள் எனக் கூறுகின்றார் (மாற்கு 10:12-14).

• திருமணம் இறைவனால் ஏற்படுத்தப்பட்டபடியினால் அது நிரந்தரத் தன்மையுள்ளதாகவும் முடிவில்லாததாகவும் இருக்கவேண்டும். விவாகரத்து இதயக்கடினத்தினிமித்தம் மோசேயினால் கொடுக்கப்பட்டதாகும். ஆனால், கடவுள் இணைத்ததை மனிதன் பிரிக்கக்கூடாது என திருமறை பேசுகின்றது (மாற்கு 10:2-12).

• எபேசியர் 5:22-30 வரையுள்ள பகுதியில் பவுல் கணவனுக்கும் மனைவிக்கும் இடையேயுள்ள உறவை திருச்சபைக்கும் கிறிஸ்துவுக்கும் இடையேயுள்ள அன்புறவிற்கு ஒப்பிடுகின்றார். மேலும், 1 கொரிந்தியர் 13ம் அதிகாரத்தின் அடிப்படையில் இவ்வன்பு காணப்பட வேண்டுமெனவும் கூறுகின்றார். ஆரம்ப காலத்தில் இயேசுவின் வருகை உடனடியாக நடைபெறும் என கருதிய பவுல் திருமணத்தை நிராகரித்தபோக்கு 1 கொரிந்தியர் 7ம் அதிகாரத்தில் நாம் படிக்கலாம். ஆனால், வருகை தாமதமானபடியால் திருமணத்தைக் குறித்த பவுலின் நிலை வேறுபட்டது.

ஆக்கம்: அற்புதம்