22 ஜுலை 2022

யோவான் 20:11-18

Mary Magdalene

• ஆண்டவர் இயேசு உயிர்த்தெழுந்து காட்சியளித்த பெண்களுக்குள் இவர் முதலிடம் பெறுகின்றார். இதனை, யோவான் 20:1-16ல் நாம் படிக்கின்றோம். இவரே யோவான் நற்செய்தியின்படி உயிர்த்தெழுந்த இயேசுவின் செய்தியை சீடருக்கு எடுத்துச் செல்கின்றார் . எனினும், உயிர்த்தெழுந்த இயேசுவின் காட்சியை குறித்து பவுல் பேசும்போது, இவருடைய பேரைக் குறித்து பேசவில்லை (1 கொரிந்தியர் 15:1-10).

• பொதுவாக, யூத பெண்கள் தந்தையாலோ அல்லது சகோதரர்களாளோ அடையாளப்படுத்தப்படுவர். ஆனால், இங்கு இப்பெண் ஊரினால் அடையாளப்படுத்தப்படுகின்றார். இதனால், இப்பெண் ஊரறிந்த பெண் ஆவார். ஆண்டவர் இயேசு இவரிடமிருந்து ஏழு பிசாசுகளை துரத்தியதாக படித்தறிகின்றோம். எனினும், புதிய ஏற்பாட்டு ஆரம்ப காலத்தில் அதிக செல்வாக்குடையவராக காணப்பட்டார்.

• முதலாம் உடன்படிக்கை வாசகத்தின்படி செப்பனியா 3:14-20 சீயோன் குமாரத்தியின் நிலையைப் பற்றி ஆசிரியர் பேசுகின்றார். இக்கருத்துக்கள் திருப்பாடல் 116ல் வரும்போது கடவுளின் சத்தம் அவருடைய செயற்பாடுடன் தொடர்புடையதாக காணப்படுகின்றது.

• இரண்டாம் உடன்படிக்கை வாசகத்தின்படி 2 யோவான் பகுதியில் திருச்சபையின் பெண் தலைமைத்துவத்தைப் பற்றி நாம் படிக்கின்றோம். மேலும், ஆசிரியர் அங்கு ஞானவாதக் கொள்கையினரை கண்டித்து மாம்சத்தில் வாழ்ந்த இயேசுவை கிறிஸ்து என அறிக்கையிடுமாறு கூறுகின்றார். மேலும், மகதலேனா மரியாள் ஒரு நற்செய்தியை எழுதிய போதிலும் ஆணாதிக்கத்தின் விளைவாக அந்நற்செய்தி திருச்சபையினால் ஏற்றுக் கொள்ளப்படவில்லை.

ஆக்கம்: அற்புதம்