21 செப்டெம்பர் 2022

திருத்தூதுவரும் நற்செய்தி பணியாளனுமாகிய மத்தேயு

Mathew, Apostle and Evangelist

மத்தேயு 9:9-13

•            நற்செய்தி பகுதியிலேயே (மத்தேயு 9:9-13) இயேசுவின் சீடனாகிய மத்தேயு அழைக்கப்பட்டதைக் குறித்து திருமறை பேசுகின்றது. இவர் ஒரு வரிதண்டுபவராக காணப்பட்டார். பாரம்பரிய கதையின் அடித்தளத்தில் இயேசுவிடமும் வரியை அறவிட முற்பட்ட வேளையில் இயேசுவிடம் எதுவும் காணப்படாதபடியால் அவரிடமிருந்து வரியை அறவிடமுடியவில்லை. ஏனெனில், ஆரம்பத்தில் அவரிடம் ஓர் அப்பம் காணப்பட்டது. அதற்கான வரியை அறிவிடலாம் என்று எண்ணிய வேளையில் இயேசு மத்தேயுவிடத்திற்கு வரும்போது அவர் அந்த அப்பத்தை மற்றவர்களுடன் பகிர்ந்து முடித்துவிட்டார். எனவே, இதனால் வரியை அறவிட முடியவில்லை. இதன் பின்னணியில் இயேசு அவரை என்னைப் பின்பற்றி வா என அழைத்த வேளையில் அவருக்கு பின்னே மத்தேயு சென்றார்.

•            இயேசு மத்தேயுவை அழைத்து நோய்களை குணப்படுத்தவும், பிசாசுகளைத் துரத்தவும், கடவுளின் அரசைப் பற்றி அறிவிக்கவும் உலகுக்குள் அனுப்பினார். அதேபோன்றே, இயேசுவின் இறுதி கட்டளைக்கு மத்தேயு முக்கியத்துவம் கொடுக்கின்றார் (மத்தேயு 28:19-26). இக்கட்டளையில் வார்த்தைக்கும் அவர் முக்கியத்துவம் கொடுக்கின்றார். இதனையே முதலாம் உடன்படிக்கை வாசகம் (நீதிமொழிகள் 3:13-17)ல் நாம் காண்கின்றோம்.

•            இரண்டாம் உடன்படிக்கை வாசகத்தின்படி (2 கொரிந்தியர் 4:1-6) இப்பகுதியில் பவுல் கிறிஸ்துவின் நற்செய்தியை அறிவிக்குமாறு கூறுகின்றார். ஆனால், இன்று நாங்கள் கிறிஸ்துவின் நற்செய்தியைத் தவிர்த்து எமது நற்செய்திகளையே அறிவிக்க முற்படுகின்றோம். மேலும், மத்தேயு தனது நற்செய்தியை எழுத்துருவில் நூலாக எழுதிய போதிலும் பவுல் மக்களை நோக்கி, நீங்களே உயிருள்ள நற்செய்திகளாக மாறுமாறு வேண்டிக்கொள்கின்றார்.

•            மத்தேயு எத்தியோப்பியா பகுதிகளில் தமது திருப்பணியை ஆற்றியதாக வாய்மொழிப் பாரம்பரியங்கள் கூறுகின்றன.

இலங்கை மலையக மக்கள் தொடர்பான ஆக்கங்களை கீழே காணுங்கள்

ஆ இவனா, இவே அவன்ட மகன் தானே!
உடைத்தல் + உருவாக்குதல்  வாலிபனான இயேசு சமூகத்தில் நடக்கும் ஒவ்வொரு காரியங்களையும் கூர்ந்து கவனிக்கும் ஆற்றல் …
இறக்கப்படாத சிலுவைகள்
கிட்டத்தட்ட இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்னதாக இயேசு என்னும் ஒரு தனிமனிதன் முழு உலகின் மீட்பிற்காக கொடிதான …