ஒரு புதிய முயற்சியாக, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் தலைமையில் 09/01/2024 அன்று சிறுபான்மை நல சிறப்புக்கூடுகை நடைபெற்றது. பல்வேறு கிறிஸ்தவப் பிரிவுகளைச் சேர்ந்த தலைவர்களை அழைத்து, அவர்களின் நீண்டகால கவலைகளைப் பற்றி விவாதிக்கவும் தீர்க்கவும். திரு இனிகோ இருதயராஜ் எம்எல்ஏ அவர்களால் ஒருங்கிணைக்கப்பட்டது. இக்கூட்டத்தில் தென்னிந்திய திருச்சபையின் (சிஎஸ்ஐ) சார்பில் பொதுச்செயலாளர் வழக்குரைஞர் உயர்திரு.சி.பெர்னாண்டாஸ் ரத்தின ராஜா, அவர்களின் தலைமையில் சிஎஸ்ஐ பிஷப்கள் மற்றும் இயக்குநர்கள் உட்பட திருச்சபை தலைவர்கள் பங்கேற்றனர்.

இச்சந்திப்பின் போது, தலைவர்கள் தங்கள் மறைமாவட்டங்கள் தொடர்பான பிரச்னைகளை எழுப்பினர். சிறப்பாக, தென்னிந்திய திருச்சபையின் (சிஎஸ்ஐ) சார்பில் பொதுச்செயலாளர் வழக்குரைஞர் உயர்திரு.சி.பெர்னாண்டாஸ் ரத்தின ராஜா, அவர்கள் நமது கிறிஸ்தவ சிறுபான்மை கல்வி நிறுவனங்களில் குறிப்பிடத்தக்க தாக்கங்களை ஏற்படுத்தும் பிரச்சினைகளை தமிழக அரசிற்கு தெரியப்படுத்தினார். இரண்டு நூற்றாண்டுகளுக்கு மேலாக சமுதாயத்திற்கு சேவை செய்வதில், குறிப்பாக விளிம்புநிலை சமூகங்களுக்கு கல்வி வழங்குவதிலும், பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதிலும் இந்த நிறுவனங்கள் முக்கிய பங்கை ஆற்றி சேவை செய்து வருவதையும் அவர் அடிக்கோடிட்டுக் காட்டினார்.

மேலும் அரசு உதவி பெறும் பள்ளிகள், கிறிஸ்தவ சிறுபான்மை கல்வி நிறுவனங்களில் காலை உணவு திட்டத்தை அரசு தொடர்ந்து நடைமுறைபடுத்த வேண்டும், கிறிஸ்தவ நிறுவனங்களில் கல்வி கற்கும் பெண்களுக்கு வழங்கப்படும் ரூ.1000 நிதியுதவியை நீட்டிக்க வேண்டும் என்றும், கிறிஸ்தவ நிறுவனங்களிலும், அரசு உதவிபெறும் கிறிஸ்தவ பள்ளிகளிலும் நடைபெறும் ஆசிரியர் நியமனங்கள் தொடர்பான கரிசனைகளை தொடர்பாகவும், அரசு உதவிபெறும் கிறிஸ்தவ பள்ளிகளுக்கு நீட் தேர்வில் இடஒதுக்கீடு நீட்டிப்பு செய்யவேண்டும் என பல கோரிக்கைகளை தமிழக அரசிற்கு முன் வைத்தார்.

அதற்குப் பதிலளித்த முதல்வர், கிறிஸ்தவ உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளுக்கும் காலை உணவுத் திட்டத்தை விரிவுபடுத்துவதாகவும், ரூ.1000 நிதி மானியமாக வழங்க உறுதியளித்தார். இந்த நிறுவனங்களில் கல்வி கற்கும் பெண்களுக்கு 1000 கூடுதலாக வழங்கவும், ஆசிரியர் நியமன செயல்முறையை சீரமைக்க உறுதியளித்தார்.

அத்துடன் கிறிஸ்தவ மதத்திற்கு மாறியவர்களுக்கும் இடஒதுக்கீடு உள்ளிட்ட சலுகைகளை முழுவதுமாக வழங்கும் வகையில் இந்திய அரசியலமைப்பு சட்டத்தை திருத்த வேண்டும் என தமிழ்நாடு சட்டப்பேரவை தனித் தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றியுள்ளத்தையும் சுட்டிக்காட்டியதோடு, கிறிஸ்தவ கல்வி நிறுவனங்களுக்கு நிலையான அரசு சான்றிதழ் வழங்குதல், கிறிஸ்தவ கல்லறைகள் தொடர்பான பல்வேறு சட்ட சிக்கல்களை தீர்த்து வைத்தல். மாநகராட்சி மற்றும் நகராட்சி சார்பில் கிறிஸ்தவ இஸ்லாமியர்களுக்கு கல்லறை தோட்டம் அரசு சார்பில் ஒதுக்குதல் போது நிலங்களில் கட்டப்பட்டுள்ள வழிபாட்டு தலங்களின் ஆக்கிரமிப்புகளை அகற்றுதல், முறைப்படுத்துதல் மற்றும் இருப்பிடம் செய்தல் தொடர்பான விரிவான கொள்கை அரசால் உருவாக்கப்பட்டு இருப்பதையும், மேலும் வழிபாட்டு தளங்கள் உள்ளிட்ட பல்வேறு சிறுபான்மையினர் நலன் சார்ந்த அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.

கிறிஸ்தவ மக்களின் நலனுக்காகவும், உரிமைகளுக்காகவும் தொடர்ந்து தொண்டாற்றி வரும் தென்னிந்திய திருச்சபையின் (சிஎஸ்ஐ) பொதுச்செயலாளர் வழக்குரைஞர் உயர்திரு. சி. பெர்னாண்டஸ் ரத்தின ராஜா, அவர்களுக்கு அனைத்து கிறிஸ்தவ மக்கள் சார்பாக மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்

  • இயேசு இயக்கம்