7 ஆகஸ்ட் 2022
தூதுப்பணி ஞாயிறு

எல்லா இடத்திலிருந்தும் எல்லா இடத்திற்கு

Mission – From Everywhere to Everywhere


மத்தேயு 13:47-52

• கடவுளுடைய அன்பை வார்த்தையினூடாகவும் செயல்களினூடாகவும் பிறருக்கு எடுத்து கூறுவதையே தூதுப்பணி என அழைக்கின்றோம். இந்ஞாயிறு தூதுப்பணியை நினைந்துக் கொள்ள எம்மை அழைக்கின்றது.

• நற்செய்தி வாசகத்தின்படி மத்தேயு 13:47-52 தூதுப்பணி எல்லோருக்கும் உரியதாக ஆண்டவர் இயேசு போதிக்கின்றார். குறிப்பாக, கடுகு விதை உவமையின்படி அது முளைத்து செடியாகி அதனுடைய செடிகளில் எல்லா இன பறவைகளும் வந்து தங்குகின்றன. மேலும், வலை உவமையின்படி கடலுக்குள் வீசப்படும் வலையில் எல்லா இன மீன்களும் பிடிபடுகின்றன. இவைகளினூடாக இன, மொழி, சமய, சாதி எல்லாவற்றையும் கடந்ததாக தூதுப்பணி ஆற்றப்படவேண்டும்.

• முதலாம் உடன்படிக்கை வாசகத்தின்படி 1 இராஜாக்கள் 17:1-16ன் படி தூதுப்பணி செயல்வடிவம் சார்ந்ததாகவும் காணப்படுகின்றது. குறிப்பாக, எலியா இறைவாக்கினர் சீதோன் நாட்டிலுள்ள செரப்தா பட்டண விதவையினால் போஷிக்கப்படுகின்றார். இதன்மூலம், தூதுப்பணியாளன் எப்பொழுதும் கொடுப்பவனாக மாத்திரமன்றி பெறுபவனாகவும் காட்டப்படுகின்றான். தூதுப்பணியின் ஒரு பகுதியாக இறைவாக்கு உரைக்கும் பணி காணப்படுகின்றது. எனவேதான், எலியா ஆகாப்பை நோக்கி இறைவாக்கு கூறுகின்றார். இம்மாதிரிகளை தூதுப்பணி ஆற்ற அழைக்கப்பட்டுள்ளதை திருச்சபை கவனத்தில் கொள்ளவேண்டும்.

• திருப்பாடல் அல்லது சங்கீதம் 107:1-15 இஸ்ராயேல் மக்களை இறைவன் பராமரிக்கும் முறையைப்பற்றி இங்கு படிக்கின்றோம். இதனூடாக, தூதுப்பணியில் மக்கள் அல்ல மாறாக, கடவுளே உரிமையாளன். இந்த மனநிலை நம் அனைவருக்கும் உருவாக வேண்டும்.