வசந்தகாலப் பூக்கள் 6

ஆறாம் தியானம்

எமது வாழ்வில் பல அறிவுறுத்தல்கள் எமக்குத் தரப்பட்டுள்ளன. ஆனால், பல சந்தர்ப்பங்களில் நாம் அறிவுறுத்தல்களை கடைபிடிக்க மறுக்கின்றோம். மத்தேயு 26:31-35ல் ஆண்டவர் இயேசு பேதுருவை நோக்கி, நீ சேவல் கூவுவதற்கு முன்னே மூன்று முறை என்னை மறுதலிப்பாய் எனக் கூறினார். ஆனால், பேதுருவோ இவ் அறிவுறுத்தல்களை சரியாகக் கேட்டு கடைப்பிடிக்கவில்லை.

மத்தேயு 26:1-13ல் இயேசு ஒரு பெண்ணின் வீட்டில் இருந்தபோது அப்பெண் விலையேறப் பெற்ற பரிமளத் தைலத்தை இயேசுவின் பாதத்தில் உடைத்து ஊற்றி அவர் பாதத்தை கண்ணீரால் நனைத்தாள். இதனைப் பார்த்துக் கொண்டிருந்த யூதாஸ்காரியோத்து, இவள் ஏன் இந்த பணத்தை வீணாக்குகின்றாள் எனக் கேட்டார். அப்பொழுது இயேசு யூதாஸ்காரியோத்தை நோக்கி, தரித்தர் எப்பொழுதும் உங்களோடு இருப்பார்கள். ஆனால், நான் எப்பொழுதும் உங்களோடு இருக்கமாட்டேன் எனக் கூறி தனது மரணத்தைக் குறித்து அறிக்கையிட்டதோடு யூதாசுக்கு ஓர் அறிவுறுத்தலையும் கொடுத்தார். ஆனால், யூதாஸ் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை. 

கடவுள் எமது நாளாந்த வாழ்வில் பல அறிவுறுத்தல்களை எமக்கு தருகின்றார். ஆனால், நாம் அவற்றை சரிவர ஏற்றுக் கொள்வதில்லை. அதுவே எமது வீழ்ச்சிக்கான காரணமாகும். இதுவே பேதுருவுக்கும் யூதாசுக்கும் ஏற்பட்டது.

செபம்: இறைவா உம்மால் கொடுக்கப்படும் அறிவுறுத்தல்களை கேட்டு அதன்படி நடக்க அருள் புரிவாயாக. ஆமென்.