dresden, woman church, martin luther

சீர்திருத்தமும் மறு சீர்திருத்தமும்

#. திருமறை பகுதிகள்

இணைச்சட்டம் 26: 4 – 11

அப்போஸ்தலர் 2: 43 – 47

மத்தேயு 13: 33 – 35

#. உட்புகு முன் …

மார்ட்டின் லூத்தர் அவர்களை நினைவில் கொள்வோம். அவரின் கொள்கைகள்  “Sola scriptura and Sola fide – faith alone and scripture alone”. திருமறையும் பற்றுறுதியுமே  கிறிஸ்தவ வாழ்விற்கு அவசியமானவை என்ற கொள்கைகள்,  திருச்சபை வரலாற்றில் ஒரு பெரும் திருப்புமுனையாக அமைந்தது, அது திருச்சபையில் சீர்திருத்தத்தை உண்டாக்கியது…

இந்த சீர்திருத்தம் பல புதிய திருச்சபைகளுக்கு (Protestant Churches) வழித்தடங்களை உண்டாக்கியது.  பல இறையியல் கோட்பாடுகளை வகுத்து தந்தது….

திருச்சபை வரலாற்றில் ஆயர்கள் மட்டுமே முக்கியத்துவம் பெற்றிருந்த நிலையில், இந்த சீர்திருத்தத்தினால்  “இறை மக்கள்” ( Laity) முக்கியத்துவம் பெறுவதற்கு,  இறை மக்களின் பங்களிப்பு பெருகுவதற்கு,  பல இறையியல் கோட்பாடுகள் உருவாவதற்கு இந்த சீர்திருத்தம் பேருதவியாக இருந்தது…

இந்த சீர்திருத்தம் ரோமன் கத்தோலிக்க திருச்சபையில் “எதிர் சீர்திருத்தங்களை”(Counter Reformation) உண்டாக்கியது. அது ரோமன் கத்தோலிக்க திருச்சபையை “தன்னை தற்பரிசோதனை”( Self Analysis) செய்து கொள்ளவும், மறு சீரமைப்பு (Reforming) செய்வதற்கு வழி நடத்தியது…

இந்தியாவிற்கு வந்த அருட்பணியர்கள் சமூகத்தில் பல சீர்திருத்தங்களை செய்து, சமூக மாற்றத்திற்கு வித்திட்டதை மறுக்க முடியாது. குறிப்பாக உடன்கட்டைஏறுதல், குழந்தை பலி, சாதி ஒழிப்பு, தீண்டாமை, மூடநம்பிக்கைகள்…

கல்வி, மருத்துவம், சேவை  போன்ற பல வழிகளில் சமூகத்தில் பல சீர்திருத்தங்களை செய்து சமூகம் மாண்போடு வாழ்வதற்கு வழிவகை செய்தார்கள்…

அம்பேத்கர், பெரியார், அண்ணா, கலைஞர் இன்னும் பல தலைவர்கள் அரசியல் ரீதியாக சமூக சீர்திருத்தத்திற்கு வித்திட்டத்தையும் நாம் நினைவில் கூறுவோம்…

சீர்திருத்தம் என்றோ நடைபெற்ற ஒன்று அல்ல, அனுதினமும் நடைபெற வேண்டிய ஒன்று, அவரவர் வாழ்வில் நடைபெற வேண்டிய ஒன்று, அடுத்த தலைமுறை வளமோடு வாழ்வதற்கு வகுக்க வேண்டிய ஒன்று, சமூகம் அறநெறியில் வளரவும், சமூக அக்கறையோடு, சமூக கரிசனையோடு, சமூக சிந்தையோடு சமூகம் செயல்படுவதற்கு சீர்திருத்தம் ஒரு கருவியாக இருந்து வருகிறது…

திருமறைப் பகுதியில் வழியாக சீர்திருத்தங்களை மூன்று வகையாக நாம் புரிந்து கொள்ளலாம்….

A). சட்டங்கள் வழியாக சீர்திருத்தம்…(இணைச் சட்டம் 26: 4 – 11)

B). தொடர்பியல் வழியாக சீர்திருத்தம்…(மத்தேயு 13: 33 – 35)

C). செயல்கள் வழியாக சீர்திருத்தம்…(அப்போஸ்தலர் 2: 43 – 47)

A). சட்டங்கள் வழியாக சீர்திருத்தம்…(இணைச்சட்டம் 26: 4 – 11)

இஸ்ரவேல் சமூகம் எகிப்தில் அடிமையாக வாழ்ந்த பொழுது அவர்கள் மனதில், எழுந்த ஒன்று கடவுளை வழிபட வேண்டும் என்பது. அவர்கள் விடுதலை பெற்று வந்த பின்பதாக மோசே அதை கருத்தில் கொண்டவராக கடவுளை வழிபடுவதற்குரிய நெறிமுறைகளை, சீர்திருத்தங்களை சட்ட வடிவில் இஸ்ரவேல் மக்களுக்கு வழங்கினார். அந்த நீண்ட உரையில் உள்ள ஒன்றுதான் உபாகமம் 26 ஆம் அதிகாரத்தில் உள்ளது… அந்த சீர்திருத்தங்கள் எவை எனில்..,

1. கடவுளை வழிபடுவதற்கு  “சம உரிமையை” (Right to Worship) உண்டாக்கிய சீர்திருத்தம்… (உபாகமம் 26 :4)

இஸ்ரவேல் சமூகம் எகிப்தில் அடிமையாக வாழ்ந்த ஒரு சமூகம். அடிமைத்தனத்திலிருந்து இறைவனால் விடுவிக்கப்பட்ட ஒரு சமூகம். விடுதலைப் பெற்ற பின்பு அவர்கள் வாழ வேண்டிய வழிமுறைகளையும், நெறிமுறைகளையும் இந்த திருமறை பகுதி நமக்கு சுட்டிக்காட்டுகிறது….

400 ஆண்டுகளாக எகிப்தில் இஸ்ரவேல் சமூகம் வாழும் பொழுது, அவர்கள் எகிப்தியரின் பல தெய்வ வணக்க வழிபாட்டை  (Poly Thiesm) தங்களுக்குள் ஏற்றுக் கொண்டிருந்ததை மோசே கண்டுணர்ந்து (உதாரணமாக சிலை வணக்கம், கன்று குட்டியை வணங்குதல்…) அதை சீர்திருத்தம் செய்கின்றார். அது சமய சீர்திருத்தத்திற்கு வழிவகுத்தது….

இஸ்ரவேலர் ஆகிய நாம் வழிபடும் கடவுள் “ஓர் இறை கடவுள்” என்பதை மோசே வலியுறுத்துகின்றார். கடவுளை எவரும் வழிபடலாம். கடவுளை வழிபடுவதற்கு அனைவருக்கும் உரிமை உள்ளது….

உயர்ந்தவர் – தாழ்ந்தவர், ஏழை – பணக்காரன் என்ற படிநிலைகளை உடைத்து, ஒவ்வொருவரும் தங்கள் படையல்களை (Offerings) கடவுளுக்கு படைக்கும் “சம உரிமை உண்டு” என்ற சீர்திருத்தத்தை மோசே தன் சமூகத்திற்கு வலியுறுத்துகின்றார்….

இது இஸ்ரவேல் சமூகத்திடையே ஆண்டான் – அடிமை, தூய்மை – தீட்டு, என்ற பாகுபாடுகளை இந்த சீர்திருத்தம் களைந்து இறைவனுக்கு முன் அனைவரும் சமம் என்ற உரிமையை இது தந்தது…

2. கடவுளின் பெயரால் நடைபெறும் சந்தை பொருளாதாரத்தை தடை செய்த  (Abolished Temple based Economy) சீர்திருத்தம்… (உபாகமம் 26 :4)

மோசே உண்டாக்கிய சீர்திருத்தம் ஆலயத்தை மையமாக வைத்து நடைபெறும் சந்தை பொருளாதாரத்தை தடை செய்தது…

நீ உன் நிலத்தில் பயிரிடும் விளைச்சலின் பலனை கடவுளுக்கு காணிக்கையாக செலுத்து என்ற நியமங்களின் வழியாக, மோசே பிற்காலத்தில் ஆலயத்தை மையமாக கொண்ட சந்தை பொருளாதாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கிறார்…

ஆலயம் என்பது மக்கள் வழிபாட்டிற்குரிய இடம். அது அனைவருக்கும் உரிய இடம். அதில் தூய்மை – தீட்டு என்ற கருத்தியல் படைக்கும் பலிப் பொருட்களிலோ, படைக்கும் நபர்களிலோ இருக்கலாகாது என்ற சீர்திருத்தத்தை மோசே கட்டமைக்கின்றார்….

ஒவ்வொருவரும் தங்கள் முதல் பலனை (First Fruit) கடவுளுக்கு செலுத்துவதற்கு உண்டான சம உரிமையை (Equal Right)இந்த சீர்திருத்தம் மக்களிடையே விதைத்தது…

இந்த சீர்திருத்தம் ஆசாரியர்களுக்கும், ஆலய பணியாளர்களுக்கும் புதிய நெறிமுறைகளை வகுத்துக் கொடுக்கின்றது. கடவுளின் பார்வையில் அனைவரும் சமம், அனைவரும் இறை மக்களே, ஏற்றத்தாழ்வுகள் கடவுளுக்கு எதிரானவை, கடவுளுக்கு படைக்கும் பொருள்களில் தரம் பிரிப்பது கடவுளுக்கு எதிரானது என்ற கோட்பாடுகளை சீர்திருத்தம் உண்டாக்குகிறது….

3. திருப்பணியாளர்களின் பணிகளை வரையறை (Designed the Church workers Duties) செய்த சீர்திருத்தம்….( உபாகமம் 26 :4)

ஆசாரியர் என்பவர் மக்களைப் போன்று அவரும் ஒரு மனிதர். அவர் கடவுளுக்கும் – மனிதருக்கும் இடையீட்டாளர் (Intermediate) அல்ல. ஆசாரியர்

என்பவர் கடவுளின் பணியாளர், மக்களின் பணியாளர், சமூகப் பணியாளர்(Social Worker) மக்களுக்காக பணியாற்றும் பணியாளர் என்ற உயர்ந்த நோக்கத்தை இந்த சீர்திருத்தம் உண்டாக்குகிறது…

இந்த ஆசாரியர் என்பவர் வேறு எங்கிருந்தோ வருபவர் அல்ல, அவரும் அடிமைப்பட்ட சமூகத்தில் இருந்த ஒருவர்தான் ஆசாரியராக தெரிவு செய்யப்படுகிறார்,  தெரிவு செய்யப்பட வேண்டும் என்ற நியமத்தையும் மோசே  உண்டாகிய சீர்திருத்தம் வழிவகை செய்கின்றது…

ஆசாரியர் என்பவர் கடவுளின் பணியாளர்(Servent of God)., அப்பணிக்கென்று எந்த சிறப்பு தகுதிகளும்( Not required any Special skills & Requirements) தேவையில்லை. அவரின் பணி காணிக்கை பொருட்களை பலி பீடத்தில் எடுத்து வைப்பதோடு ( Helping to humanity) நிறைவு பெறுகிறது என்ற தெளிவினை மோசேயின்  சீர்திருத்தம் உண்டாக்குகிறது…

மக்களின் காணிக்கை பொருட்களை கடவுள் ஏற்றுக் கொள்ளுமாறு பரிந்துரைக்கவோ, அதற்கான மன்றாட்டு விண்ணப்பங்களை ஏறெடுப்பதோ , கடவுளுக்கென்று தனி மொழியினை (So called Language) உண்டாக்கி அதன்மூலம் மக்களிடமிருந்து தங்களை பிரித்துக் காட்டி தங்களை உயர்ந்தவர் என்ற படி நிலையை தக்கவைப்பதை இந்த சீர்திருத்தம் தடை செய்கின்றது….

மொத்தத்தில் மக்கள் அனைவரும் ராஜரிக ஆசாரிய கூட்டம் (Priest hood of all believers) என்பதை இந்த சீர்திருத்தம் அழுத்தமாக சமூகத்தில் பதிவு செய்கிறது….

4. வழிபாட்டு ஒழுங்கு முறைகளை ( Order of worship)  நடைமுறைப்படுத்திய சீர்திருத்தம்… (உபாகமம் 26: 5 – 10)

மோசே உண்டாக்கிய நெறிமுறைகள் இஸ்ரவேல் மக்களிடத்தில் கடவுளை வழிபடும் ஒழுங்கு முறையை அது உண்டாக்கியது…

# கூட்டு வழிபாட்டு முறையை ஏற்படுத்தியது (Corporate Worship) V 6…

# வழிபட அழைத்தல் (Call to Worship) – V 5

# கடவுளின் பண்புகளை போற்றுதல் (Adoring attributes of God) – v 5-9

# பாவ அறிக்கை செய்தல் (Confession) – v 5

# கடவுளின் செயல்களை தியானித்தல் (Meditating of God’s Liberative Act) – v 5 – 9

# பற்றுறுதியை அறிக்கை செய்தல் (Affirming Faith & Creed ) – V 5 – 9

# கடவுளுக்கு நன்றி சொல்லுதல் (Thanks Giving to God) – V 9

# நன்றி காணிக்கை செலுத்துதல் (Offerings) – V 10

# கடவுளை பணிந்து கொள்ளுதல் (Bestowed)- V 10

# உறுதியேற்றல் (Oath taking) – V 11

மோசே உண்டாகிய நெறிமுறைகள் மற்றும்  சீர்திருத்தம் சமய வழிபாட்டு முறைமைகளில்  ஒழுங்கு முறை சீர்திருத்தத்தை  உண்டாக்கியது….

B). தொடர்பியல் வழியாக சீர்திருத்தம்…(மத்தேயு 13: 33 – 35)

இயேசு கிறிஸ்துவின் போதனைகள், அற்புதங்கள், அடையாளங்கள், வாழ்வு மற்றும் திருப்பணிகள் பல சீர்திருத்தங்களை அவர் வாழ்ந்த நாட்களில் உண்டாக்கியது….

மோசே வகுத்துத் தந்த சட்டங்களும், நியமங்களும் சீர்திருத்தத்தை ஆதியிலே தோற்றுவித்திருந்தாலும் காலப்போக்கில் அவை நீர்த்துப் போயின…

ஆலயங்கள் சந்தை பொருளாதார  மையங்களாகவும், ஆசாரியத்துவம் அதிகார மையமாகவும், பரிசேயத்தனம் மக்களிடையே புரையோடினதாகவும், சமயத்திலும் சமூகத்திலும் அநீதி மலிந்து இருந்தது…..

திருமுழுக்கு சடங்காக மாறிப் போனது. விருத்தசேதனம் தூய்மை தீட்டுக்கு வழி வகுத்தது. தர்மம் – ஜெபம் – உபவாசம் இம்மூன்றும் பொருளற்று கடைப்பிடிக்கப்பட்டது. ஏழைகளும் வறியவர்களும் விளிம்பு நிலையிலே தக்கவைக்கப்பட்டிருந்தார்கள். செல்வந்தர்கள் மேலும் செல்வந்தர்கள் ஆனார்கள் வறியவர்கள் மேலும் தள்ளப்பட்டார்கள்….

இந்த நிலையில் இஸ்ரவேல் சமூகத்திடையே சீர்திருத்தத்தை ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து   தொடர்பியல் (Method of Communication) வழியாக கருத்தியல் ரீதியான சீர்திருத்தங்களை  மேற்கொண்டார்… அவைகள்:-

1. உரையாடல் (Dialogue) வழியாக உணர்வுகளில் சீர்திருத்தம்

இயேசு கிறிஸ்து கடலோரத்தில் அமர்ந்து திரளான ஜனங்களுக்கு உரையாற்றல் வழியாக இறையரசு பற்றிய கருத்தியல்களை அவர்களுக்குள் சீர்திருத்த விதைகளை விதைத்தார்…

விதைக்கிறவன் உவமை – விவசாயம் செய்து வருகின்ற மக்களிடையே, அவர்களின் அன்றாட நிகழ்வுகளை உவமை வழியாக உரையாடுகின்றார். அந்த உரையாடல் வழியாக மன மாற்றத்தையும், மாற்று உருவாக்கம் பற்றிய தமது கருத்தியல்களை அவர்களுக்குள் விதைக்கின்றார். நிலம் அது தன் பலனை தர வேண்டும் என்று எதிர்பார்ப்பு விவசாயிகள் மத்தியில் இருப்பதை  முன் நிறுத்தி, நல்ல நிலம் போல் மக்கள் உருவாக வேண்டும் என்ற சீர்திருத்த சிந்தனைகளை உரையாடல் வழியாக  சீர்திருத்தத்தை உண்டாக்கினார்….

2. உவமைகள் (Parables) வழியாக உளவியல் சார்ந்த சீர்திருத்தம்

களைகள் பற்றிய உவமை நீதிக்கும் – அநீதிக்கும், நேர்மையாளர்களுக்கும் – அநீதியாளர்களுக்கும் உள்ள நிலைமைகளை எடுத்துக்காட்டுவதோடு மட்டுமில்லாமல்,  நியாயத்தீர்ப்பில் தண்டனை தீர்ப்பு எவ்வாறு இருக்கும் என்பதை உளவியல் ரீதியாக அணுகி அவர்களை சிந்திக்க வைத்து அதன் மூலம் சீர்திருத்தத்தை ஆண்டவர் உருவாக்கினார்….

3. காட்சிப்படுத்தல் (Visualisation) வழியாக உறவுகளில் சீர்திருத்தம்

கடுகு விதை உவமை வழியாக தன்னைப் பின்பற்றி வருகின்ற மக்களுக்கு சீர்திருத்த சிந்தனைகளை ஆண்டவர் கற்றுத் தருகின்றார். இந்த உவமை வழியாக மக்கள் மனதில் ஒரு பெரிய காட்சி படுத்துதலை ஆண்டவர் உருவாக்குகிறார்…

சிறிய கடுகு விதை வேரூன்றி வளர்ந்து, மரமாக உருவெடுத்து, கிளைகள் பரப்பி, பறவைகளுக்கும், மிருகங்களுக்கும், வழிப்போக்கர்களுக்கும் எவ்வாறு உதவியாக இருக்கிறது என்ற காட்சிப்படுத்தலை அவர்கள் முன் விவரிக்கின்றார். அந்தக் காட்சிப்படுத்துதல் கேட்கின்ற மக்களின் மனங்களில் மாற்றத்திற்கு வித்திடுகின்றது. அது சமூக சீர்திருத்தத்திற்கு வழி வகுக்கின்றது….

4. முறைசாரா கல்வி ( Informal Education) மூலம் கருத்தியல் சீர்திருத்தம்

இயேசு கிறிஸ்துவின் போதனைகளை கேட்ட மக்கள் பெரும்பாலும் ஏழைகள், எளியவர்கள், நடுத்தர மக்கள் மற்றும் அன்றாட கூலி வேலை செய்கின்றவர்கள்…

கல்வி மறுக்கப்பட்டவர்கள் என்றால் அது மிகையாகாது. அப்படிப்பட்ட தம் மக்களுக்கு ஆண்டவர் முறைசாரா கல்வியின் வழியாக கதைகள், உவமைகள், மேற்கோள்கள் போன்றவற்றை எடுத்துக்காட்டி, அவர்கள் வைத்திருந்த கருத்தியலில் சீர்திருத்தத்தை ஆண்டவர் கொண்டு வந்தார்…

புளித்த மாவு உவமை வழியாக இறையரசு பற்றிய கருத்தியலை உணரும் படி செய்கின்றார். மேசியா யுகம் வரும் என்ற கருத்தியலில் எதிர்பார்த்து இருந்த மக்கள் மத்தியில் அது வந்து விட்டது. அது நமக்குள் செயல்பட்டு வருகின்றது….

புளித்த மாவை ஒரு பெண் எப்படி கையாளுகிறார்களோ அதைப்போல  எளியவர்கள் , பெண்கள் மூலம் இறை ஆட்சி அமைப்பதற்கான செயல்களை கடவுள் துவங்கி விட்டார் என்பதை முறைசாரா கல்வி மூலமாக சீர்திருத்தத்தை கட்டமைக்கின்றார்…

5. இறையியல் கல்வி (Theological  education) மூலம் பக்தி நெறியில் சீர்திருத்தம்

இயேசு கிறிஸ்துவின் போதனைகளும், அற்புதங்களும்,  அடையாளங்களும்… சாமானிய மக்களிடம் எளிதாக சென்றடைந்தது….

அவரின் போதனை முறைகளும்(Teaching methods), தொடர்பு முறைகளும் (Communication skills), அணுகுமுறைகளும் (Approach), பயன்படுத்திய ஊடகங்களும்( Tools of communication)  மக்களிடையே பெரும் தாக்கத்தை உண்டாக்கியது….

அது இறைவனைப் பற்றிய புரிந்து கொள்ளுதலையும், இறைவனின் செயல்பாடுகளைப் பற்றிய அறிந்து கொள்ளுதலையும், இறை ஆட்சியின் தகவுகள் பற்றிய முழு தெளிவுகளையும் மக்களிடையே அது உருவாக்கியது….

அது சாமானிய மக்களை இறைமக்கள் என்ற உயர்ந்த பண்பு நிலைக்கு, இறைவனின் பணியாளர்கள் எனும் உயரிய தன்மைக்கும் அவர்களை வழிநடத்தி, இறையியல் பார்வையை அவர்களுக்குள் உண்டாக்கி அவர்கள் வழியாக சமூகத்தில் சீர்திருத்தங்களை கொணரவைத்தது….

C). செயல்கள் வழியாக சீர்திருத்தம் (அப்போஸ்தலர் 2:43-47)

சீர்திருத்தம் ஒன்று சட்ட வடிவில் அமைந்திருக்க வேண்டும். இரண்டாவது தொடர்பியல் வழியில் அமைந்திருக்க வேண்டும்.  மூன்றாவது செயல் வடிவில் அமைந்திருத்தல் வேண்டும்…

ஆதித்திருச்சபை மக்களிடையே சீர்திருத்தத்தை செயல்படுவில் நடத்திக் காட்டியது. சாத்தியமே இல்லாத ஒன்றை அது சாத்தியப்படுத்தியது. நடைமுறைக்கு ஒவ்வாது என்று தெரிந்த ஒன்றை நடைமுறைப்படுத்தி காட்டியது அன்றைய ஆதித்திருச்சபை….

சீர்திருத்தவாதிகள் என்று தனி நபர்களை மையப்படுத்தி அவர்களின் கொள்கைகளுக்கும் கோட்பாடுகளுக்கும் முக்கியத்துவம் தந்து பழக்கப்பட்ட நமக்கு, ஆதி திருச்சபை சமூகம் ஒட்டுமொத்த சமூக சீர்திருத்தவாதிகளாக வாழ்ந்து காட்டியிருக்கிறார்கள்… எப்படி என்றால்..

1). ஒரு கூட்டுக் குடும்பமாக(Joined Family) வாழ்ந்தார்கள் v 43

# உயர்ந்தவர் – தாழ்ந்தவர்,  ஏழை – பணக்காரன், இருப்பவர் – இல்லாதவர் (Haves and Have Not) என்ற படிநிலைகளை உடைத்து எறிந்த ஒரு சமூகமாக வாழ்ந்து காட்டினார்கள்…

2). குடும்ப மனப்பான்மையோடு வளர்ந்தார்கள்( One Family) v 43

# பால், இனம், வர்க்கம், பொருளாதாரம், நிறம், மொழி போன்ற வேறுபாடுகளை களைந்து,  ஓருலை சமூகமாக வாழ்ந்து காட்டினார்கள்…

3). பொதுவுடைமை சமுதாயத்தை உருவாக்கினார்கள் (Communist Society) v 43

# A socioeconomic order centered around common ownership of the means of production, distribution, and exchange that allocates products to everyone in the society based on need….

4). பகிர்வில் நிறைவை கண்டார்கள்( Equal Sharing) v 44

பெறுவதில் கிடைக்கும் இன்பத்தை காட்டிலும் கொடுப்பதில் கிடைக்கும் மகிழ்ச்சியை, மன நிறைவை இந்த சமூகம் தங்களின் செயல்களில் காட்டி முன்மாதிரி சமூகமாக ( Model Society) வாழ்ந்திருக்கின்றார்கள் …

5). ஒருமனம் உடையோராய் மாற்றிக் கொண்டார்கள்(Oneness Minded) v 46

# கொள்கைகளில் முரண்படலாம் , கருத்து மோதல்கள் உருவாகலாம் ஆனால் கருத்தொற்றுமை என்பது உயர்வானது. அந்த கருத்தொற்றுமையோடு ஆதித்திருச்சபை சமூகம் சான்றாக இருந்திருக்கின்றார்கள்…

6). கூட்டு பக்தி நெறியில் ஒவ்வொரு நாளும் வாழ்ந்தார்கள்( Worshipping community) v 46

# கூட்டு வாழ்வில் தான் இறைவன் இருக்கின்றார் என்ற பேருண்மையை தங்களது வாழ்வில் வாழ்ந்து காட்டியதோடு மட்டும் இல்லாமல் கூட்டு வழிபாட்டில் தான் இறை எழுந்தருளை,  (Presence of God) உணர முடியும் என்ற பக்தியை, ஆன்மீகத்தை உலகிற்கு காட்டிச் சென்றிருக்கின்றார்கள்…

7). எதிர் சீர்திருத்தங்களை திருச்சபையில் உண்டாக்கினார்கள்(Counter Reformation ) v 46

# ஜெப ஆலயங்களுக்கு மாற்றாக இல்லங்கள் வழிபடுமனைகளாக, பிரதான ஆசாரியர்,  ஆசாரியர், வேதபாரகர்,  பரிசேயர் என்ற சமயம் சார்ந்த படி நிலைக்கும், சமூக பிளவுகளுக்கும் எதிராக எதிர் சீர்திருத்தங்களை சமயங்களில் தோற்றுவித்தார்கள், அதன் மூலம் சமத்துவ சமூகத்தை கட்டமைத்தார்கள் (Egalitarian society).

8). சமூக நல்லிணக்கத்தோடு வாழ்ந்தார்கள் (Communal Harmony) v 47

#இணங்கி போகுதல் என்பது அடிமைத்தனத்திற்கு வித்திடும் ஆனால் இசைந்து வாழ்தல் என்பது சமூக நல்லிணக்கத்திற்கு வழிவகுக்கும். ஒருவரையொருவர் புரிந்து கொண்டு அன்பு உறவில் வாழ்ந்து காட்டி சென்றிருக்கின்றார்கள்…

9). சமூகப் புரட்சிக்கு வித்திட்டார்கள்(Social Revolution) v 47

# புரட்சிகள் எல்லாம் ஆயுதங்களோடு, ஆயுதங்கள் வழியாகத்தான் வந்திருக்கிறது. ஆனால் ஆதித்திருச்சபை அன்பர்கள் சத்தம் இன்றி, யுத்தம் இன்றி, ஆயுதம் இன்றி ஒரு சமூகப் புரட்சிக்கு வித்திட்டிருக்கின்றார்கள் என்றால் அந்த சமூகம் ஒரு மாற்று சமூகமாக (New Order) வாழ்ந்து காட்டியிருக்கின்றார்கள்.

#. நிறைவாக…

விடைகளை

திருத்தம் செய்யும்

ஒவ்வொரு ஆசிரியரும்

சீர்திருத்தவாதிகளே…

முடிகளை

திருத்தம் செய்யும்

அழகு கலை நிபுணரும்

சீர்திருத்தவாதிகளே…

கறைகளை

திருத்தம் செய்யும்

சலவை தொழிலாளியும்

சீர்திருத்தவாதிகளே…

மலங்களை

சுத்தம் செய்யும்

தூய்மை பணியாளர்களும்

சீர்திருத்தவாதிகளே….

ஆலயங்களை

ஒழுங்குப்படுத்தி வைக்கும்

ஆலய பணியாளர்களும்

சீர்திருத்தவாதிகளே…

புத்தியாய் நடந்து வாருங்கள் திருவசன பூட்டை திறந்து பாருங்கள் – என்ற கீர்த்தனை பாடலை

திருச்சபையாக உணர்ந்து பாடுவோம்…

திருவசனங்களை உணர்ந்து தியானிப்போம்…

திரு அவையாக சீர்திருத்தங்களில் பங்கு பெறுவோம்…

இறை ஆசி என்றும் உங்களோடு இருப்பதாக…

இறைப்பணியில்

Rev. Augusty Gnana Gandhi
Trichy – Tanjore Diocese
Ariyalur Pastorate