19 ஜுன் 2022
Revelation of God in Worship

மாற்கு 3:1-6

• ஒரு மனிதனோ அல்லது சமூகமோ தமது வார்த்தைகளாலோ அல்லது செயல்களாலோ கடவுளுக்குரிய மதிப்பையும் மரியாதையையும் செலுத்துமிடமாக வழிபாடு காணப்படுகின்றது. இவ்வழிபாட்டில் இறைவனின் வெளிப்பாட்டை நாம் காணலாம். எனினும், சில வழிபாடுகளை இறைவன் நிராகரிக்கும் தன்மையையும் நாம் காண்கின்றோம் (ஆமோஸ் 5:18-21). உதாரணமாக: நீதியில்லாத வழிபாட்டை இறைவன் நிராகரிக்கின்றார்.

• முதலாம் உடன்படிக்கை வாசகத்தின்படி 1 இராஜாக்கள் 8:22-30ல் சாலமோன் கடவுளுக்காக ஆலயத்தை கட்டிய பின்னர் அதற்கான நன்றி பலியையும் இறை மகிமையையும் வேண்டி கடவுளை நோக்கி வழிபடுகின்றான். இவ்வழிபாட்டில் இறைவனின் வெளிப்பாடு இருந்ததை நாம் பார்க்கின்றோம். திருப்பாடல் 148ல் ஆசிரியர் முழு படைப்புக்களையும் கடவுளுக்குரிய மதிப்பையும் மரியாதையையும் செலுத்துமாறு அழைக்கின்றார்.

இரண்டாம் உடன்படிக்கை வாசகத்தின்படி வெளிப்படுத்தின விசேஷம் 14:1-7ல் கடவுளை வழிபடும் சமூகத்தினரை நாம் பார்க்கின்றோம். அவர்கள் தமது துன்ப துயர அனுபவங்களின் மத்தியிலும் இறைவனை போற்றும் நிலை சிறந்ததாகும். இந்நிலை இன்று எமக்கு அவசியமானதாகும்.

• மாற்கு 3:1-6ல் செப ஆலயத்தில் ஆண்டவர் இயேசு கையில் குறைப்பாடு உள்ள மனிதரை குணப்படுத்துகின்றார். இதற்கூடாக, வழிபாடு விடுதலையின் சின்னமாக பார்க்கப்படுகின்றது. இறைவனை வழிபட ஓர் சுதந்திரமான சூழல் அவசியமென நாம் காணலாம். எனவேதான், மோசே இஸ்ரவேல் மக்களை பலியிடுவதற்காக வனாந்திரத்திற்கு அழைத்துச் செல்ல பார்வோனிடத்தில் அனுமதி வேண்டினான். மேலும், மாற்கு 3:6ல் ஏரோதியரும் சதுசேயரும் இயேசுவைக் கொல்ல தேடினார்கள் என்பதன் மூலம் சமயவாதிகளும் அரசியல்வாதிகளும் ஒன்றிணைந்து அநீதி செய்வதற்காக ஒன்று கூடினர். வழிப்பாட்டை சூழல் இத்தகைய செயற்பாடுகளிலிருந்து நாம் விலகிச் செல்ல உதவிச் செய்ய வேண்டும்.

ஓர் ஆலய வழிபாடு நிறைவடைந்த பின்னரே உண்மையான வழிபாடு ஆரம்பமாகின்றது. வாழ்க்கையே அவ்வழிபாடு ஆகும்.