20 பெப்ரவரி 2022

The Corruption of Creation

லூக்கா 10:13-16

•             சீர்க்கேடுகள் தனிமனித வாழ்விலும் சமூக வாழ்விலும் திருச்சபை வாழ்விலும் படைப்புக்களிலும் இருப்பதை நாம் பார்க்கின்றோம்.

•             ஏசாயா 5:1-13 என்ற பகுதியில் கடவுள் இஸ்ரவேல் மக்களை திராட்சை செடிகளுக்கு ஒப்பிடுகின்றார். கடவுள் திராட்சை கொடியாகவும், மக்கள் செடிகளாகவும் இங்கு காண்பிக்கப்படுகின்றனர். மேலும், இவர்கள் இனிப்பான பழங்களைக் கொடுக்கும்படி கடவுளால் நியமிக்கப்பட்டனர். ஆனால், இவர்களுடைய சீர்க்கேடுகள் கசப்பான பழங்களைக் கொடுக்கும் நிலையில் காணப்படுகின்றனர் என கடவுள் வேதனை அடைகின்றார். இங்கு, இஸ்ரவேலரின் செயற்பாட்டினால் கடவுள் வேதனை அடைகின்றார். மேலும், படைப்பின்போது மனிதனை படைத்ததற்காக கடவுளின் வேதனையை நாம் பார்க்கின்றோம் (தொடக்கநூல் / ஆதியாகமம் 6:5).

•             திருப்பாடல்கள் / சங்கீதம் 8ல் கடவுள் மனிதனை தேவதூதரிலும் சற்று குறைவாக உருவாக்கி அவனை முடிசூட்டினார். இவ்வாறு, உயர்ந்த நிலையில் படைக்கப்பட்ட மனிதன் பாவம் என்னும் சீர்க்கேட்டினால் தேவாசயலை இழந்ததை வாசிக்கின்றோம். புதிய ஏற்பாட்டு பகுதியில் கலாத்தியர் 1:5-10 பவுல் தன்னுடைய அழைப்பைப் பற்றி பேசுகின்றார். இங்கு, பவுல் தவறுசெய்த வேளையில் தேவ வாழ்வினை இழந்து தேவசாயலில் படைக்கப்பட்ட மனிதர்களை சமய தீவிரவாதத்தின் விளைவாக துன்புறுத்தினார். எனினும், மனந்திரும்புதலின் ஊடாக கடவுளின் வெளிப்பாட்டை பெற்ற அவன் திருப்பணியை தொடருகின்றார்.

•             நற்செய்தி பகுதியில், சீர்க்கேட்டில் வாழ்ந்த மக்களுக்கு இறைவனின் நியாயந்தீர்ப்பு உண்டென தனி மனிதர்களுக்கு அல்ல. மாறாக நகரங்களுக்கும்  இந்நிலை உருவாகி உள்ளது. கோராசின் பட்டணம், கப்பர்நகூம் பட்டணம் போன்றவைகளில் நற்செய்தி அறிவிக்கப்பட்டபோதிலும் அவர்கள் அதனை ஏற்றுக் கொள்ளாமையினால் அப்பட்டணங்கள் மீது கடவுளின் தீர்ப்பு ஏற்படும் என இயேசு கூறுகின்றார். எனினும், தீர்ப்பிடுதல் எங்களுக்குரிய வேலையல்ல. மாறாக, கடவுளுக்குரியது என்பதையும் காணலாம்.

அருளம்பலம் ஸ்டீபன்
அருளம்பலம் ஸ்டீபன்

இலங்கை

One thought on “படைப்பின் சீர்க்கேடுகள்”

Comments are closed.