இறையாட்சி வழி வாழ்வோர் பேறுபெற்றோர் அவர்கள் இறைமக்கள்

இறையாட்சி வாழ்வு இறையருள் மற்றும் மனித முயற்சி இரண்டும் சார்ந்தது. இவற்றை நிராகரித்து வாழ்வோர் இறையாட்சி வழி வாழ்வோர் அல்ல. இறையாட்சி வழி வாழும் வாழ்வு என்பது சீரருகே நடப்பட்ட மரம் போன்றது அதன் வாழ்வு பசுமையானது. அது அனைவருக்கும் பயன் தரும். நாம் எத்தகைய வாழ்வை வாழ்கிறோம்?
எரேமியா 17: 5 – 10 லிருந்து சில குறிப்புகள்

ஆண்டவரில் நம்பிக்கை வைப்போர் பேறுபெற்றோர் ஆண்டவரே அவர்களது நம்பிக்கை (7). அவர்கள் ஆண்டவருடைய இடத்தை ஒருபோதும் மனிதருக்கு கொடுப்பதில்லை. அவர்கள் நீர் அருகே நடப்பட்ட மரம் போல இருப்பர் (8). நலமாக்க முடியாத வஞ்சகம் மிக்க இதயத்தில் நல்ல மாற்றம் வேண்டும்.
ஆண்டவரில் நம்பிக்கை வைத்தல் நாளாந்த செயற்பாட்டில் வெளிப்ப வேண்டும்.

நற்பேறு பெற்றோர் யார்? இறை கட்டளைகளின்படி நடப்போர். அவர்கள் நீரோடை அருகில் நடப்பட்ட மரங்களுக்கு ஒப்பானவர்கள் என்கிறது திருப்பாடல் 1

Rev SDP Selvan, Sril Lanka.


இறையாட்சியில் வாழ்வோருக்கு கிறிஸ்துவின் உயிர்ப்பு வலுவூட்டுகிறது. உயிரப்புமிகு வாழ்வை நம்புவது அடிப்படை

1 கொரிந்தியர் 15: 2 – 20

இறையாட்சி எனும் மாற்றுப்பண்பாடு

லூக்கா 6:17 – 26 சமவெளிப்பொழிவில் கடவுளில் மட்டும் நம்பிக்கை வைப்போரின் வாழ்வு வலியுறுத்தப்படுகிறது. தம்மையும், அவர்களது உலகவளங்களையும் கடவுளாக்குவோரது வாழ்வு வாழ்வே இல்லை என்பது உறுதியாக இயேசுவால் முன்வைக்கப்பட்டுள்ளது. இறையாட்சி என்பது மாற்றுப்பண்பாடு சார்ந்தது. இங்கு உலக வளங்கள் இறையருளை நம்பி வாழ்வோரால் பொறுப்புடன் பாவிக்கப்பட் வேண்டும். உலக வளங்களை யாரும் அவர்களது கடவுளாக்க முடியாது.

‘இறையாட்சி மக்களின்’ வாழ்வும் பணியும் ஒரு மாற்றுப் பண்பாடு இது அனைவருக்கும் உரியது. இது குருக்களுக்கு மட்டும் உரிய ஒன்றல்ல. இறைமக்கள் அனைவரும் உலகப்பொருட்களை வணங்காமல் கடவுளை வழிபட வேண்டும் அப்போது அவர்களுடைய வாழ்வு ‘எப்போதும் பசுமையானதாக’ அமையும்.

மன்றாட்டுவோம், கடவுளே, இறையாட்சி மக்களாகி, இறையாட்சி எனும் மாற்றுப் பண்பாட்டின்படி வாழ அருள் தாரும். உலகப்பொருட்களை வணங்காமல் உம்மை மட்டும் வணங்க வலுவூட்டும். கடவுளின் ஆட்சி வழி மன்றாடுகிறோம். ஆமென்.

அருட்பணிSDP.செல்வன்
அருட்பணிSDP.செல்வன்

இலங்கை