மேலறைப்பேச்சு 6

லெந்து காலத்தின் ஆறாம் நாள் தியானம்

திருமறைப் பகுதி: தூய யோவான் 13: 34-35

தம்முடைய சீடர்களிடமிருந்து (நம்மிடமிருந்து) அவர் எதிர்நோக்குவது என்ன என்று சொல்கிறார். நம் வாழ்வை தன்னலமற்றும் தாராளமாகவும் பிறர்க்கென வழங்க வேண்டுகிறார். அவர் தற்போது கொடுக்கும் புதிய கட்டளை முன்பு அவர் சொன்ன பரஸ்பர பாத சுத்தி என்ற பணியாற்றுதலின் (13:14) தொடர்சிதான். பணி அன்பை வளர்க்குமா அல்லது அன்பு பணியைத் தூண்டுமா? இந்த இரண்டு சந்தர்ப்பங்களிலும் இயேசு தன்னை மேற்கோளாகவும் அளவுகோலாகவும் முன்னிலைப் படுத்துகிறார்: “நான் உங்களில் அன்பாயிருந்தது போல” (13:34) மற்றும் “நான் உங்களுக்கு செய்தது போல” (13:15).என்பது தான் அவர் கூற்று. நாம் ஆற்றும் அன்பின் பணி அதை ஏற்பவர்களுக்கு பயனுடையது மட்டுமல்ல அதைக் காண்பவர்கள் மனதிலே ”பணியாற்றும் நாம் இயேசுவுக்கு சொந்தமானவர்கள்” என்ற வலுவான தாக்கத்தையும் ஏற்படுத்த வல்லது..

அன்பு தங்கை / தம்பி! “இப்படித்தான் இயேசு என்னை நேசித்தார்.” என்று சொல்லக்கூடிய சந்தர்ப்பங்களை நினைவு படுத்து. இயேசு நேசித்தது போல நேசிப்பது எளிது என்று நினைக்கிறாயா? நீ நேசிக்க முடியாத ஒருவரை நினைத்துப்பார். இயேசுவின் அன்பை அவருக்குக் காட்ட இந்த லெந்து நாட்களில் நீ என்ன செய்யக்கூடும்?

நேசிக்க எனக்குக் கற்பித்த இயேசுவே, உம்முடைய அன்புக்கு நான் பாத்திரன் அல்ல. ஆனாலும் நீர் என்னை நேசித்தீர். தகுதியற்றவர்களையும் நேசிக்கத் தேவையான மனத்தாழ்மையையும் பொருமையையும் எனக்குத் தாரும்.

இயேசுவின் பதில்…….

என் குழந்தாய், நீ என் செல்லப்பிள்ளை; உன்னைத் தகுதியற்ற குழந்தையாக நான் எண்ணியதே இல்ல. இதுதான் அன்புகூறுவதின் இரகசியம்: அன்புக்குத் தகுதியற்றவரை ஆண்டவரின் பிள்ளையாகக் கருது. அவர் எனக்கு அன்பானவர் என்பதை மறந்துவிடாதே. என்னோடு இணைந்து அவரை நேசிப்பது மிகவும் எளிது. வா, சற்று முயன்றுதான் பாரேன்.

Devotion for sixth day in Lent

Read John 13:34-35

Jesus tells his disciples (and us) just what was required of them (us). Jesus weants us to be selfless and generous in using our lives for others. His new commandment is just an extension of his earlier exhortation (13:14) of mutual foot washing. Which of these promotes the other: does loving promote serving or does serving generate love? On both occasions Jesus presents himself as a model and standard: “as I have loved you,”(13:34) and “as I have done to you” (13:15). This has an impact not just on the beneficiaries of the act of love but has a far reaching effect on all of us to know that we belong to Jesus.


Dear sister, brother! Are there occasions you can name as “This is how Jesus loved me”? Do you think loving the other as Jesus loved you is easy? Can you think of a person you may not be able to love. What can you do express “love” to that person during this season?

Dear Jesus who taught me to love, I realize I have not been worthy of your love; yet you loved me. Give me the humility and patience to love the unlovable

Jesus might say…..
My child, I have always loved you as my own child! I never thought of you as being unworthy of my love. That is the secret. Consider every unlovable person as God’s child and remember I love him/her. It is easy to join me in loving. Let us just do it!

James Srinivasan & Grace

பேராயர் ஜேம்ஸ் சீனிவாசன்
பேராயர் ஜேம்ஸ் சீனிவாசன்

தென்னிந்தியா