மேலறைப் பேச்சு 2

லெந்து காலத்தின் இரண்டாம் நாள் தியானம்
திருமறைப் பகுதி: தூய யோவான் 13: 6-11

இயேசுவின் அன்பின் சேவை பேதுருவுக்கு ஒரு பேரதிர்ச்சி. பேதுரு துடிப்புடன் தடை சொல்லுகிறான். காரணங்கள் என்னவெனில், ஆண்டவர்மேல் கொண்ட மரியாதையும் ”தான் தகுதியற்றவன்” என்ற உணர்வும்தான். அதன் பின்விளைவு- ஆண்டவரிடத்தில் அவனுக்கு ”பங்கில்லை” என்ற தீர்ப்பு. அதைக் கேட்டதும் பேதுருவுக்கே உரிய துடுக்குடன் குளிக்கவே ஆயத்தமாகிறான். தன்னுடன் இணைந்திருப்பது பற்றி இயேசு அவனுக்கு பொருமையுடன் விளக்குகிறார்.

  • தங்கை/ தம்பி, நீ நீண்டகாலமாக கிறிஸ்தவள்(ன்)தானே?
  • நீ தூய்மையாய் இருக்கிறாயா?
  • எது உன்னைத் தூய்மைப்படுத்திற்று?
  • இயேசு உன்னை சிறப்பான முறையிலே தூய்மைப்படுத்தின அனுபவம் உனக்கு இருக்கின்றதா?
  • இயேசு ஏதொ ஒரு விதத்திலே உன்னை இன்னமும் தூய்மைப்படுத்த கொஞ்சம் இடம் கொடேன்.

இயேசுவிடம் இறைஞ்சுவோம்

இயேசுவே, தூய ஆண்டவரே, உம்மோடும் உமது மக்களோடும் இணைந்திருப்பதற்கு
நீர் எனக்களித்த இந்த சிறந்த வாய்ப்புக்காக நான் உம்மைத் துதிக்கிறேன். இன்னமும் என்னைத் தூய்மைப்படுத்தி என்னை உம்மோடு காத்துக்கொள்ளும். நீரே என் வாழ்வு.

இயேசுவின் பதில்…….

என் குழந்தாய், உன்னை நான் உள்ளும் புறமும் அறிவேன். உன்னுடைய பெலவீனங்களும் எனக்கு மறைவானவை அல்ல. என் உதிரத்தால் நீ கழுவப்பட்டாய். உன்னை நான் தொடர்ந்து தூய்மைப் படுத்துவேன். என் இதயத்தில் உன்னைக் காத்துக்கொள்வேன். நீ எனக்கு சொந்தம்!

Devotion for the second day in Lent.
Read John 13:6-11

Jesus’ expression of love took Peter by surprise. He resisted to be served by his master because of his respect for him and his personal feeling of unworthiness. However, Peter frantically reversed his position once he heard about the consequences of not being cleansed by the Lord – having no part in Him. Peter, as usual went a bit far and offered himself to be bathed. Jesus patiently explained about being part of Christ.

Sister, brother, You have been a Christian all along; are you clean? What made you clean? Have you known Jesus cleansing you in a significant way? Please let Jesus cleanse you a little more in some way.

Prayer

Jesus, holy Lord, thank you for the privilege of being part of you and the people of God. Cleanse me more and keep me. You are my life.

Jesus might say…

My child, I know you inside out. I know your weaknesses also. I cleansed you with my blood. I shall continue to cleanse you and keep you close to my heart. You are mine!

James Srinivasan & Grace

பேராயர் ஜேம்ஸ் சீனிவாசன்
பேராயர் ஜேம்ஸ் சீனிவாசன்

தென்னிந்தியா